Tuesday, September 7, 2010

ரிப்பிங் என்றால் என்ன?

நான் ஒரு அசல் பாடல் சிடி ஒன்றை வாங்கி, அதில் உள்ள பாடலை நகலெடுத்து, அதை என் கணினியில் ஒட்டினேன். என்ன ஒரு ஆச்சரியம்! அனைத்து பாடல்களின் அளவும், 44 பைட்ஸ்கள் தான்.
உடனே, அந்த பாடல்களை என் VLC Player மூலம் இயக்கினேன். பாடல்களோ பாடவில்லை. சிடியை போட்டு VLC Player மூலம் இயக்கினால், பாடல்கள் இசைக்கத் தொடங்கினா. அப்பொழுது தான் ரிப்பிங் குறித்து புரிந்து கொள்ளத் தொடங்கினேன். ரிப்பிங் செய்வத்ற்கு பல மென்பொருள்கள் இருக்கின்றன. குறிப்பாக Jet Audio, Nero, Ashampoo போன்றவற்றை பயன்படுத்தலாம்.

நான் Ashampoo மூலம் எவ்வாறு ரிப்பிங் செய்வது என்பதை காணலாம்!
இதுவேண்டுமென்றால், டோரண்ட் மூலம் இறக்கிக் கொள்ளலாம்.

 இதில் உள்ள Burn or Rip Music ஐ தேர்வுசெய்தால் அதில் கடைசியாக உள்ள Rip an Audio CD ஐ தேர்வு செய்ய வேண்டும். பின் பாடல் சிடியை CD/DVD Drive இல் இட்டு Next செய்ய வேண்டும். நமக்கு என்ன ஃபார்மெட் தேவையோ(MP3, WMV) அதை தேர்வு செய்ய வேண்டும். பின்பு நமக்கு தெரிந்தது தான்! தேவைப்படும் இடத்தில் சேமித்துக் கொள்ளலாம். இந்த கோப்புகளை கணினி, கையடக்க பேசிகளில் கேட்டு மகிழலாம்!

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails

மறுமொழி