Thursday, September 16, 2010

குறுவட்டுகளின் வங்கி

நம்மிடையே ஏராளமான குறுவட்டுகள் இருக்கும். பலவகையான நிகழ்வுகளை உள்ளடக்கியதாக குறுவட்டுகள் காணப்படும். எடுத்துக்காட்டாக  குறுவட்டுகளில் மென்பொருட்கள், படங்கள், ஒளி/ஒலி பதிவுகள் போன்ற வகைகளை வைத்திருப்போம்.




கொஞ்சம், கொஞ்சம் சேகரித்து நூற்றுக்கணக்கில் இருக்கும். நம்மிடையே பலவகையான மென்பொருட்கள் குறுவட்டில் இருக்கும். ஆனால், எந்த குறுவட்டில் என்ன மென்பொருள் இருக்கிறது என்பது தான் தெரியாது. ஒவ்வொரு குறுவட்டாக கணினிடில் இட்டு, பார்த்து தேடிப்பிடிக்க வேண்டும்.

 இதற்குப் பதிலாக, குறுவட்டுகளில் உள்ள தலைப்புகளை மட்டும் சேகரித்து (VLC, Open Office, Autocad 2011) வைத்துக் கொண்டு அந்த குறுவட்டிற்கு எண்ணோ அல்லது பெயரோ கொடுத்து சேமித்து கொண்டால் போதுமே! இதுபோல பல நூறு குறுவட்டுகளையும் சேமித்துக் கொள்ளலாம். ஆம்! அத்தகைய மென்பொருள் தான் Disc Collection.

இந்த Disc Collection இல் உள்ள தேடல் பெட்டியில் உங்களுக்குத் தேவையான மென்பொருள்/படம் இவற்றின் பெயரைக் கொடுத்தால், அது எந்த குறுவட்டில் (குறுவட்டுகளில்) உள்ளது என்பதை தெளிவாக காண்பிக்கும். பின் என்ன நம் நேரம் மிச்சம் தானே!

2 comments:

Unknown said...

பழைமையான பெயர். நவீன அறிவியல் பணி. வாழிய நீடு !

Dr.Raja.Karthick said...

tamil word koppai pdf il maatruvadhu epadi

Post a Comment

Related Posts with Thumbnails

மறுமொழி