Tuesday, September 14, 2010

பொய் இயங்குதளமும், மெய் மென்பொருட்களும்

             நாம் பயன்படுத்துவது உண்மைக் கணினி. ஆனால் நமக்கு   அவ்வப்போது கற்பனைக் கணினியும் தேவைப்படுகிறது. அதாவது, வன்பொருள் துறை சார்ந்தவர்களுக்கு, இந்த கற்பனைக் கணினியின் பயன் மிகப்பெரியது. ஏனெனில்,

ஏதேனும் ஒரு புதிய இயங்குதள மென்பொருள்(OS) கிடைத்துவிட்டால், உடனே அதை நிறுவிப்பார்க்க ஆசைப்படுவோம். நம்முடைய “மெய் கணினி” இல் நிறுவினாலோ, நம்முடைய உள்ள பழைய இயங்குதளம் அழிக்கப்படும் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இயங்குதள முறைகளில் நிறுவ வேண்டும். இவ்வாறு நிறுவினால், கணினி பூட் ஆகும் போது பல இயங்குதளங்களை காண்பிக்கும். அதிலிருந்து ஒன்றை தேர்வு செய்வது எரிச்சல் தரும் செயல். எனவே, நாம் கற்பனைக் கணினிக்கு மாறித்தான் ஆக வேண்டும்.

அவ்வாறு கற்பனைக் கணினியை நிறுவ தேவையான மென்பொருள் Sun Virtual Box ஆகும். இதில் புதிய இயங்குதளத்தை நிறுவி சோதித்துக் கொள்ளலாம்.

  என்ன இருந்தாலும், இந்த கற்பனைக் கணினி மெதுவாகத்தான் செயல்படும். எனவே, நாம் உண்மைக் கணினியிலே நிறுவலாம். பின்பு புதிய இயங்குதளத்தை அழித்து விடலாம். இம்முறையில் உள்ள மிகப்பெரிய சிக்கல் இயங்குதளத்தை (Widows XP) நிறுவி, பின் வன்பொருட்களுக்கான மென்பொருட்களை நிறுவ வேண்டும். மேலும், நமக்கு தேவையான “பயன் மென்பொருட்களை” நிறுவ வேண்டும். இப்பதிவு இங்கு குறிப்பிடுவது இந்த “பயன் மென்பொருட்களைப்” பற்றித்தான்!      
     இந்த “பயன் மென்பொருட்களை” நாம் இயங்குதளத்தில் (C:) நிறுவுவோம். அதற்குப் பதிலாக ( இயங்கு தளத்திலேயே மட்டும் நிறுவ முடிகின்ற பயன் மென்பொருட்களை தவிர்த்து) Portable மென்பொருட்களை பயன்படுத்த துவங்க வேண்டும். இந்த Portable மென்பொருட்களை வன் தட்டின் இறுதிப்பாகத்தில் (உங்கள் விருப்பம்) நிறுவி விட்டால் போதுமே! Windows (XP, Vista, 7) ஐ நிறுவியவுடன் பயன் மென்பொருட்களை பயன்படுத்த துவங்கலாமே!



No comments:

Post a Comment

Related Posts with Thumbnails

மறுமொழி