Friday, September 10, 2010

இணைய இணைப்பிலேயே கணினியும்,பகிர்தலும்


நாம் பொதுவாக BSNL அகலப்பட்டை இணைய இணைப்பு வாங்குவோம். பொதுவாக இணைய இணைப்பு வேண்டுமென்றால் டயல் செய்வோம். பின், இணையம் கணினியுடன் இணைக்கப்படும். அதற்குப் பதிலாக எப்பொழுதுமே இணையத்துடன் இணைந்திருக்கும் வகையில் நாம் அமைத்திடலாம். இப்பதிவு பல கணினி வைத்திருப்பவர்களுக்கு பெரிதும் பயன்படும். ஏனெனில், இங்கு எளிய வலை பின்னல் (LAN) மூலம், இணையம் பகிரப்பட்டிருக்கும். அந்த வகையில் ஒரு கணினியை “சர்வர்” என்றும், மற்ற கணினிகளை “கிளையண்ட்” என்றும் வைத்திருப்போம்.

Windows XP மூலமாக Network Wizard ஐ பயன்படுத்தி, எளிய வலைப்பின்னலும், இணையப் பகிர்வும் நடைபெற்றுக் கொண்டிருக்கும். இதன் தீமைகள்
    1. “சர்வர்” இயங்காமல் “கிளையண்ட்” ஐ இயக்க முடியாது. ஏனெனில் நம்முடைய பயனர் பெயர், கடவுச்சொல் போன்றவற்றை “சர்வர்” கணினியில் தான் பதிந்திருப்போம்.
    2. புதிய கணினியை இணைக்க வேண்டுமென்றால் உடனே, Network Wizard ஐ பயன்படுத்த வேண்டும்.


இணைய இணைப்பும், பகிர்தலும் செயல் முறைகள்
1. Windows XP (OS)












2. உலாவி(Browser)யை திறக்கவும்
3. முகவரிக்கான இடத்தில் 192.168.1.1 என்று தட்டச்சு செய்து எண்டர் செய்யவும்
4. உடனே பயனர் பெயரும், கடவுச்சொல்லும் கேட்கப்படும்
    அதில் பயனர் பெயர் admin
               கடவுச்சொல் admin     என்று கொடுத்து OK செய்யவும்

5. இதில் Advanced Setup ஐ தேர்ந்தெடுக்கவும்
       
6. இதில் முதலில் உள்ள Edit ஐ சொடுக்கவும்

7.இது ATM PVC Configuration   இதில்

    PORT: [0-3] = 0 (Zero)

    VPI :[0-255]=0 அல்லது 35

    VCI :[1-65535]=35
   
    Enable VLAN Tagging = do not select (தேர்ந்தெடுக்க வேண்டாம்)

    Service Category : =  UBR without PCR
   
    இவ்வாறு செய்து Next செய்யவும்


8. இது Collection Type  இதில்

    "PPP over Ethernet (PPPoE)" ஐ தேர்ந்தெடுக்கவும்

    Encapsulation Mode = "LLC/SNAP- Bridging" ஐ தேர்ந்தெடுக்கவும்
பின் Next செய்யவும்

9. இது PPP Username and Password

    PPP Username : = <உங்கள் பயனர் பெயர்>
    PPP Password : =  <உங்கள் கடவுச் சொல்>
    PPPoE Service Name := காலியாக விடவும்
    Authentication Method := Auto
வேறு எதையும் இப்பக்கத்தில் தேர்ந்தெடுக்க வேண்டாம். Next செய்யவும்

10.இது Network Address Translation Settings

    Enable NAT = Yes (டிக் செய்யவும்)
    Enable Firewwall = Yes (டிக் செய்யவும்)
    Enable IGMP Multicast = Yes or No (உங்கள் விருப்பம்)
    Service Name = pppo_0_35_1
   
    Next செய்யவும்

11. இது WAN Setup Summary இவ்வாறாக இருக்க வேண்டும்.

    Port/ VPI / VCI : = 0/0/35
    Connection Type = PPPoE
    Service Name = pppoe_0_35_1
    Service Category : UBR
    IP Address : Automatically Assigned
    Service State : Enabled
    NAT : Enabled
    Firewall : Enabled
    IGMP Multicast : Enabled/ Disabled (ஏதேனும் ஒன்று)
    Quality of Service : Disabled
   
    இவற்றை சேமிக்கவும் (Save)


12.  அடுத்தப் பக்கத்தில் உள்ள Save and Reboot ஐ சொடுக்கவும்.
13. கணினியையும் மீண்டும் இயக்கவும் (Restart)
14. பின் Network Connections செல்லவும்
    இங்கு Control key ஐ அழுத்திக் கொண்டு ஒரு சேர “Local Area Connection" மற்றும் “ 1394 Connection " தேர்ந்தெடுத்து Right Click செய்து “ Bridege Connections " ஐ தேர்ந்தெடுக்கவும்.
15. இப்பொழுது Network Bridge உருவாகும்.  ஒரு சில நொடிகளில் “Connected” என்பது தெரியும்.
அவ்வளவு தான்!






   
 

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails

மறுமொழி