Monday, August 30, 2010

தமிழும், கணினியும்

தமிழும், கணினியும்
என்றும் இளமையாகவும், இனிமையாகவும் உள்ள தமிழை இன்று கணினித்தமிழ் என்ற நிலைக்கு கொண்டு வந்த மென்பொருள் நண்பர்களுக்கு நன்றிகள் பல!
அந்த வகையில் இரு மென்பொருட்களைப் பற்றி எழுதுகிறேன். தமிழை கணினியில் மிக எளிதாக தட்டச்சு செய்வதற்கு பல மென்பொருட்கள் உண்டென்றாலும், நான் பரிந்துரை செய்வது NHM Writer.
இதில் பல வசதிகள் உண்டு. பொதுவாக தமிழ் தட்டச்சு மூன்று வகையாக பிரிக்கலாம்.
1.பழைய தமிழ் தட்டச்சு முறை
2.ஒலியியல் முறை
3.தமிழ் 99
இதில் பழைய தமிழ் தட்டச்சு முறையை "தமிழ் தட்டச்சு”" கற்றவர்கள் மட்டுமே தட்டச்சு செய்கிறார்கள். இது மிகவும் கடினமானது கூட. முதன் முறையாக தட்டச்சு செய்பவர்கள் “"ஒலியியல்" முறையையே பின்பற்றலாம். இது மிகவும் எளிது. ஆனால், இந்த முறையில் மிக மெதுவாக தான் தட்டச்சு செய்ய முடியும். மிக எளிதாகவும், விரைவாகவும் தட்டச்சு செய்ய "தமிழ் 99” முறையே சிறந்தது.
அதெல்லாம் சரி! வேகமாக தட்டச்சு செய்ய தேவையான மென்பொருள் ஆசான் என்பதாகும். இதில் மேற்கண்ட மூன்று முறையிலும் தட்டச்சு செய்து பழகிக் கொள்ளலாம். தட்டச்சு பயிற்சி பாடங்கள் உண்டு.
ஆசான் -இல் தமிழ், ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளிலும் தட்டச்சு செய்து பழகிக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails

மறுமொழி