Thursday, September 16, 2010

குறுவட்டுகளின் வங்கி

நம்மிடையே ஏராளமான குறுவட்டுகள் இருக்கும். பலவகையான நிகழ்வுகளை உள்ளடக்கியதாக குறுவட்டுகள் காணப்படும். எடுத்துக்காட்டாக  குறுவட்டுகளில் மென்பொருட்கள், படங்கள், ஒளி/ஒலி பதிவுகள் போன்ற வகைகளை வைத்திருப்போம்.

Tuesday, September 14, 2010

பொய் இயங்குதளமும், மெய் மென்பொருட்களும்

             நாம் பயன்படுத்துவது உண்மைக் கணினி. ஆனால் நமக்கு   அவ்வப்போது கற்பனைக் கணினியும் தேவைப்படுகிறது. அதாவது, வன்பொருள் துறை சார்ந்தவர்களுக்கு, இந்த கற்பனைக் கணினியின் பயன் மிகப்பெரியது. ஏனெனில்,

Friday, September 10, 2010

இணைய இணைப்பிலேயே கணினியும்,பகிர்தலும்


நாம் பொதுவாக BSNL அகலப்பட்டை இணைய இணைப்பு வாங்குவோம். பொதுவாக இணைய இணைப்பு வேண்டுமென்றால் டயல் செய்வோம். பின், இணையம் கணினியுடன் இணைக்கப்படும். அதற்குப் பதிலாக எப்பொழுதுமே இணையத்துடன் இணைந்திருக்கும் வகையில் நாம் அமைத்திடலாம். இப்பதிவு பல கணினி வைத்திருப்பவர்களுக்கு பெரிதும் பயன்படும். ஏனெனில், இங்கு எளிய வலை பின்னல் (LAN) மூலம், இணையம் பகிரப்பட்டிருக்கும். அந்த வகையில் ஒரு கணினியை “சர்வர்” என்றும், மற்ற கணினிகளை “கிளையண்ட்” என்றும் வைத்திருப்போம்.

Wednesday, September 8, 2010

Check out Online Tamil FM: TV Zone

Check out Online Tamil FM: TV Zone

Tuesday, September 7, 2010

ரிப்பிங் என்றால் என்ன?

நான் ஒரு அசல் பாடல் சிடி ஒன்றை வாங்கி, அதில் உள்ள பாடலை நகலெடுத்து, அதை என் கணினியில் ஒட்டினேன். என்ன ஒரு ஆச்சரியம்! அனைத்து பாடல்களின் அளவும், 44 பைட்ஸ்கள் தான்.
உடனே, அந்த பாடல்களை என் VLC Player மூலம் இயக்கினேன். பாடல்களோ பாடவில்லை. சிடியை போட்டு VLC Player மூலம் இயக்கினால், பாடல்கள் இசைக்கத் தொடங்கினா. அப்பொழுது தான் ரிப்பிங் குறித்து புரிந்து கொள்ளத் தொடங்கினேன். ரிப்பிங் செய்வத்ற்கு பல மென்பொருள்கள் இருக்கின்றன. குறிப்பாக Jet Audio, Nero, Ashampoo போன்றவற்றை பயன்படுத்தலாம்.

நான் Ashampoo மூலம் எவ்வாறு ரிப்பிங் செய்வது என்பதை காணலாம்!
இதுவேண்டுமென்றால், டோரண்ட் மூலம் இறக்கிக் கொள்ளலாம்.

 இதில் உள்ள Burn or Rip Music ஐ தேர்வுசெய்தால் அதில் கடைசியாக உள்ள Rip an Audio CD ஐ தேர்வு செய்ய வேண்டும். பின் பாடல் சிடியை CD/DVD Drive இல் இட்டு Next செய்ய வேண்டும். நமக்கு என்ன ஃபார்மெட் தேவையோ(MP3, WMV) அதை தேர்வு செய்ய வேண்டும். பின்பு நமக்கு தெரிந்தது தான்! தேவைப்படும் இடத்தில் சேமித்துக் கொள்ளலாம். இந்த கோப்புகளை கணினி, கையடக்க பேசிகளில் கேட்டு மகிழலாம்!

Friday, September 3, 2010

எளிய வலைப்பின்னலில் மற்றவருடன் பேச



பொதுவாக நமக்கு எளிய வலைப்பின்னலை உருவாக்கத் தெரியும். அந்த வலைப்பின்னலின் ஊடாக நாம் பிற கணினியில் உள்ளவர்களுடன் பேச, பைல்களை பகிர்ந்து கொள்ள, அரட்டை அடிக்க முடியும்.
எனக்கு தெரிந்த வரையில் இந்த வசதி விஸ்டா, 7 இல் இல்லை.

தேவையானவை:
1.விண்டோஸ் XP,98
2.வலைப்பின்னலில் உள்ள குறைந்த பட்சம் 2 கணினிக்ள்
3.Head phone with Mic
செய்ய வேண்டியவை

     1. முதலில் ரன் கமாண்ட் சென்று conf என்று தட்டச்சு செய்யது OK செய்யவும்.

 
2.  Next செய்யவும்.

3. இந்த சன்னலின் தேவையான விவரங்களை பூர்த்தி செய்யவும்.

4. இந்த சன்னலில் உள்ளவற்றில் தேவையானவற்றை டிக் செய்து கொள்ளவும். பின்பு Next செய்யவும்

5. இந்த சன்னலில் இணைய இணைப்பு இல்லா எளிய இணைப்பு என்றால் Local Area Network  ஐ தேர்ந்தெடுத்து Next செய்யவும்.

6. இந்த சன்னலில் Next செய்யவும்.

7. இந்த சன்னலில் Next செய்யவும்.

8.  அனைத்து செயலிகளையும் மூடிவிட்டு நமக்கு தேவையான ஒலியளவை வைத்துக் கொள்ளவும். இதற்கு Test ஐ பயன்படுத்தவும். பின்பு Next செய்யவும்.

9. Record Volume ஐ சோதித்தப்பின் Next செய்யவும்.

10.  Finish செய்து வெளியேறவும்.

11. உடனடியாக Net Meeting ஆரம்பிக்கும்.

12. Windows Security Alert வந்தால் Unblock செய்யும்.
13. இதுபோல பிற கணினியிலும் செய்யவும்
14. இப்பொழுது Desktop இல் Net Meeting -க்கான Shortcut Icon இருப்பதைக் காணலாம்.


15.இதை கிளிக் செய்வதன் மூலம் Net Meeting தொடங்குகிறது. நாம் பிற கணினியின் IP Address அல்லது கணினியின் பெயரை தட்டச்சு செய்து டயல் செய்யவும்.
16. உடனே தொடர்புகொள்ளப்படும். அந்த கணினியில் Ring Tone கேட்கும். அந்த கணினியில் உள்ளவர் Accept செய்வதன் மூலம் நம் அழைப்பை ஏற்றுக் கொள்ளலாம். அல்லது Reject செய்வதன் மூலம் அழைப்பை நிராகரிக்கலாம்.

Net Meeting மூலம் கிடைக்கும் பிற நன்மைகளை நீங்களே சுயமாக பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், இதை விஸ்டா, Windows 7 களில் இல்லை. ஏன் இதை Microsoft நீக்கி விட்டார்கள் என்று தெரியவில்லை. அல்லது இதை ஏற்படுத்த முடியுமென்றால் எனக்கும் தெரியப்படுத்தவும்.

Monday, August 30, 2010

தமிழும், கணினியும்

தமிழும், கணினியும்
என்றும் இளமையாகவும், இனிமையாகவும் உள்ள தமிழை இன்று கணினித்தமிழ் என்ற நிலைக்கு கொண்டு வந்த மென்பொருள் நண்பர்களுக்கு நன்றிகள் பல!
அந்த வகையில் இரு மென்பொருட்களைப் பற்றி எழுதுகிறேன். தமிழை கணினியில் மிக எளிதாக தட்டச்சு செய்வதற்கு பல மென்பொருட்கள் உண்டென்றாலும், நான் பரிந்துரை செய்வது NHM Writer.
இதில் பல வசதிகள் உண்டு. பொதுவாக தமிழ் தட்டச்சு மூன்று வகையாக பிரிக்கலாம்.
1.பழைய தமிழ் தட்டச்சு முறை
2.ஒலியியல் முறை
3.தமிழ் 99
இதில் பழைய தமிழ் தட்டச்சு முறையை "தமிழ் தட்டச்சு”" கற்றவர்கள் மட்டுமே தட்டச்சு செய்கிறார்கள். இது மிகவும் கடினமானது கூட. முதன் முறையாக தட்டச்சு செய்பவர்கள் “"ஒலியியல்" முறையையே பின்பற்றலாம். இது மிகவும் எளிது. ஆனால், இந்த முறையில் மிக மெதுவாக தான் தட்டச்சு செய்ய முடியும். மிக எளிதாகவும், விரைவாகவும் தட்டச்சு செய்ய "தமிழ் 99” முறையே சிறந்தது.
அதெல்லாம் சரி! வேகமாக தட்டச்சு செய்ய தேவையான மென்பொருள் ஆசான் என்பதாகும். இதில் மேற்கண்ட மூன்று முறையிலும் தட்டச்சு செய்து பழகிக் கொள்ளலாம். தட்டச்சு பயிற்சி பாடங்கள் உண்டு.
ஆசான் -இல் தமிழ், ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளிலும் தட்டச்சு செய்து பழகிக்கொள்ளலாம்.

Saturday, August 28, 2010

வலைகள்

வினவு
சவுக்கு
Tamil Hackx
Related Posts with Thumbnails

மறுமொழி